கறம்பக்குடி அருகே காயங்களுடன் கிடந்த பச்சிளம் குழந்தை பிணம் போலீசார் விசாரணை
காயங்களுடன் கிடந்த பச்சிளம் குழந்தை பிணம் கிடந்தது.
கறம்பக்குடி:
புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே சின்னான் கோன்விடுதியில் சமத்துவபுரம் உள்ளது. இங்குள்ள ஒரு வீட்டின் பின் பகுதியில் நேற்று அதிகாலை ஒரு ஆண் குழந்தையின் பிணம் கிடந்தது. அந்த குழந்தை பிறந்து 5 நாட்கள் இருக்கலாம் என தெரிகிறது. குழந்தையின் உடலில் ஆங்காங்கே காயங்கள் இருந்தன. இதைக்கண்ட அப்பகுதி பொதுமக்கள் இதுகுறித்து கிராம நிர்வாக அதிகாரி ஜெயமணி, வருவாய் ஆய்வாளர் ரவிகுமார் ஆகியோருக்கு தகவல் தெரிவித்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து ரெகுநாதபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் அங்கு சென்ற போலீசார் அந்த குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து ரெகுநாதபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜன் வழக்குப்பதிவு செய்து அந்த குழந்தை யாருக்கு பிறந்தது? எப்படி இறந்தது?, தவறான வழியில் பிறந்த குழந்தை என்பதால் கொன்று போட்டு சென்றார்களா? குழந்தையின் உடலில் இருக்கும் காயங்கள் நாய் கடித்ததால் ஏற்பட்டதா? என்பது உள்பட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story