புதிய பஸ் நிலையம் அமைப்பதற்கான இடம் தேர்வு செய்யும் பணி
கடலூர் அடுத்த எம்.புதூாில் புதிய பஸ் நிலையம் அமைப்பதற்கான இடம் தேர்வு செய்யும் பணியை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கடலூர்,
கடலூர் மாநகராட்சி பகுதியில் நடைபெறும் வளர்ச்சி பணிகளை ஆய்வு செய்வதற்காக நேற்று நகராட்சி நிர்வாகம் மற்றும் நீர் வழங்கல் துறை அரசு கூடுதல் தலைமை செயலாளர் ஷிவ்தாஸ் மீனா கடலூர் வருகை தந்தார். பின்னர் அவர் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் ஆகியோருடன் இணைந்து கடலூர் மாநகராட்சிக்குட்பட்ட குண்டு சாலை, அரசு தலைமை ஆஸ்பத்திரி சாலை ஆகிய பகுதியில் நடந்து வரும் வடிகால் வாய்க்கால் அமைக்கும் பணியை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அதனை தொடர்ந்து கடலூர் அடுத்த எம்.புதூர், அரிசிபெரியாங்குப்பம் ஆகிய பகுதியில் கடலூர் புதிய பஸ் நிலையத்தை அமைப்பதற்காக, அங்குள்ள இடங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
வடிகால் வாய்க்கால்
அப்போது அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கூறுகையில், கடலூர் மாநகரில் கடந்த 4 ஆண்டுகளாக நடந்து வரும் வடிகால் வாய்க்கால் அமைக்கும் பணியில் அனைத்து இடங்களிலும் சாலை மட்டத்தை விட 2 அடி உயரமாக வாய்க்கால் கட்டப்பட்டுள்ளது. அதை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் பருவ மழை தொடங்குவதற்குள் இன்னும் 2 மாத காலத்திற்குள் வடிகால் வாய்க்கால் அமைக்கும் பணியை முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சாலையோரம் தேங்கி உள்ள கழிவுநீரும் அப்புறப்படுத்தப்படும். குப்பைகள் அகற்ற உரிய தீர்வு காண்பதுடன், பாதுகாக்கப்பட்ட குடிநீர் வினியோகம் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும். மாநகராட்சியில் பல காலி பணியிடங்கள் உள்ளதால் வரி வசூல் செய்ய போதிய ஆட்கள் இல்லை. அதனால் காலி பணியிடங்கள் முழுமையாக நிரப்பப்படும்.
புதிய பஸ் நிலையம்
எம்.புதூா் பகுதியில் ஆய்வு மேற்கொண்ட போது பெரும்பாலான பொதுமக்கள் தங்கள் பகுதியில் பஸ் நிலையம் அமைய வேண்டும் என அவா்களது கருத்துக்களை தொிவித்தனா். இதன் அடிப்படையில் எம்.புதூா் பகுதியில் மாநகர பஸ் நிலையம் அமைத்தால், கடலூா் மாநகரப்பகுதி மேலும் விாிவடைவதுடன் நகாில் போக்குவரத்து நெருக்கடி இல்லாமல் பொதுமக்கள் சிரமமின்றி பேருந்து பயணத்தை மேற்கொள்ளலாம் என்றார்.
இந்த ஆய்வின் போது கூடுதல் கலெக்டர்(வருவாய்) ரஞ்ஜீத்சிங், மாநகராட்சி மேயர் சுந்தரி, கோட்டாட்சியர் அதியமான் கவியரசு, மாநகராட்சி ஆணையாளர் விஸ்வநாதன், நகர செயலாளர் ராஜா உள்பட பலர் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story