விஷம் குடித்து பெண் தற்கொலை
நாட்டறம்பள்ளி அருகே பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
ஜோலார்பேட்டை
நாட்டறம்பள்ளி அருகே பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
நாட்டறம்பள்ளியை அடுத்த அக்ரகாரம் கோமூட்டி வட்டம் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ். இவரது மனைவி சுகன்யா (வயது 30). இவர்களுக்கு 5 வயதில் குழந்தை உள்ளது.
சுரேஷ் திருமணம் முடிந்து கடந்த 4 ½ வருடங்களுக்கு வெளிநாட்டில் வேலை செய்வதற்காக சென்றவர் அங்கேயே உள்ளார் போனில் மட்டும் இவர்கள் பேசி வந்துள்ளனர்.
இதனிைடயே சுகன்யா அடிக்கடி உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் வாழ்க்கையில் விரக்தியடைந்த அவர் வீட்டில் இருந்த விஷத்தை குடித்து மயங்கி விழுந்தார்.
வீட்டில் இருந்தவர்கள் அவரை சிகிச்சைக்காக நாட்டறம்பள்ளி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டதும் மேல் சிகிச்சைக்காக அவர் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். டாக்டர்கள் பரிசோதித்த பிறகு சுகன்யா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது சம்பந்தமாக நாட்டறம்பள்ளி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முனிரத்தினம் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து சுகன்யா உடலை பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து மேல் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story