ஆம்பூர் அருகே சிறுமியை கர்ப்பிணியாக்கிய வியாபாரி போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

ஆம்பூர் அருகே சிறுமியை கர்ப்பிணியாக்கிய வியாபாரி போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
x
தினத்தந்தி 15 May 2022 12:57 AM IST (Updated: 15 May 2022 12:57 AM IST)
t-max-icont-min-icon

ஆம்பூர் அருகே சிறுமியை கர்ப்பிணியாக்கிய வியாபாரி போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

ஆம்பூர்

ஆம்பூர் அருகே சிறுமியை கர்ப்பிணியாக்கிய வியாபாரி போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 16 வயது சிறுமி சில நாட்களாக வயிறு வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதையடுத்து அவரது பெற்றோர் உடனே அந்த சிறுமியை வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். டாக்டர்கள் பரிசோதனை செய்ததில் சிறுமி கர்ப்பிணியாக இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

தொடர்ந்து டாக்டர்கள் அளித்த தகவலின் பேரில் ஆம்பூர் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராணி தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதில் கர்நாடக மாநிலம் பங்காருபேட்டை பகுதியை சேர்ந்த நதீம் (வயது 27) என்பவர் துணி வியாபாரத்திற்கு ஆம்பூர் வந்துள்ளார். பின்னர் மைனர் பெண் வீட்டின் அருகே வீடு வாடகை எடுத்து தங்கியுள்ளார். இவர் சிறுமியிடம் பழகி ஆசை வார்த்தை கூறி கர்ப்பிணியாக்கியது தெரியவந்தது. 

இதை தொடர்ந்து ஆம்பூர் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து துணி வியாபாரி நதீமை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

Next Story