மகா மாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா
பழைய கூடலூர் மகா மாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா நடைபெற்றது.
குத்தாலம்:
குத்தாலம் அருகே பழைய கூடலூர் கிராமத்தில் மகா மாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா கடந்த 6-ந்தேதி பூச்சொரிதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. அதைத் தொடர்ந்து 10 நாட்கள் அம்மன் வீதி உலா, அக்னி கப்பரை திருவிழா, பிடாரி அம்மன் வழிபாடு உள்ளிட்டவை நடந்தது. விழாவின் முக்கிய நாளான தீமிதி திருவிழா நேற்று முன்தினம் நடந்தது. முன்னதாக வீரசோழன் ஆற்றங்கரையில் இருந்து பக்தர்கள் கங்கணம் கட்டிக்கொண்டு முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்து கோவிலை அடைந்தனர். பின்னர் கோவில் எதிரே அமைக்கப்பட்ட தீக்குண்டத்தில் திரளான பக்தர்கள் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். இதில்திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை பழைய கூடலூர் கிராமமக்கள், நாட்டாண்மைகள் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story