நகராட்சி ஆணையாளர் தற்காலிக பணிநீக்கம்
சிவகங்கை நகராட்சி ஆணையாளர் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டனர்.
சிவகங்கை,
சிவகங்கை நகராட்சி ஆணையாளராக பணிபுரிபவர் பாலசுப்பிரமணியம், நேற்று முன்தினம் தென் மண்டல அளவிலான நகராட்சி ஆணையாளர்கள் ஆய்வுக்கூட்டம் காணொலி காட்சி மூலம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட நகராட்சிகளின் நிர்வாக இயக்குனர் பொன்னையா சிவகங்கை நகராட்சி ஆணையாளர் பாலசுப்பிரமணியம் ஒரு கோப்பு சம்பந்தமான தகவல்களை கேட்டார். அப்போது அதுகுறித்து நகராட்சி பொறியாளரிடம் கேட்டு கூறுவதாக ஆணையாளர் தெரிவித்தாராம். அதற்கு நகராட்சி நிர்வாக இயக்குனர் ஆணையாளரை தரக் குறைவான வார்த்தைகளால் பேசினாராம். இதன் பின்னர் ஆணையாளர் நிர்வாக இயக்குனர் கேட்ட தகவலை உடனடியாக எடுத்துக் கூறினாராம். அப்போதும் அவரை நிர்வாக இயக்குனர் தரக்குறைவாக திட்டியதாக கூறப்படுகிறது. இதற்கு நகராட்சி ஆணையாளர் தன்னுடைய எதிர்ப்பை தெரிவித்தாராம். தொடர்ந்து சிவகங்கை நகராட்சி ஆணையாளர் பாலசுப்பிரமணியனை தற்காலிக பணிநீக்கம் செய்து நிர்வாக இயக்குனர் உத்தரவிட்டார். அத்துடன் நகராட்சி பொறியாளர் பாண்டீஸ்வரி நகராட்சி ஆணையாளர் பொறுப்பில் நியமிக்கப்பட்டார். இந்த சம்பவம் நகராட்சி ஊழியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story