தனியார் சர்க்கரை ஆலையை பொதுமக்கள் முற்றுகை
குடிநீர் வினியோகம் செய்யக்கோரி தனியார் சர்க்கரை ஆலையை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
நெல்லிக்குப்பம்,
நெல்லிக்குப்பம் மோரை எவரட்புரம் பகுதியில் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த பொதுமக்கள் வசித்து வருகி்றார்கள். இந்த பகுதி மக்களுக்கு அதேபகுதியில் உள்ள தனியார் சர்க்கரை ஆலை நிர்வாகம் மூலம் தினந்தோறும் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக இப்பகுதி மக்களுக்கு ஆலை நிர்வாகம் குடிநீர் வினியோகம் செய்யவில்லை. இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் குடிநீர் கேட்டு ஆலை நிர்வாகத்திடம் பலமுறை கோரிக்கை வைத்தனர். ஆனால் நடவடிக்கை இல்லை.
இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் தனியார் சர்க்கரை ஆலையை நேற்று இரவு முற்றுகையிட்டதோடு, தடையின்றி குடிநீர் வழங்க வேண்டும் என கண்டன கோஷம் எழுப்பினர். அப்போது சிலர் குடிநீர் கேட்டு ஆலை பாதுகாவலர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் நெல்லிக்குப்பம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ஆலை நிர்வாகத்திடம் பேசி குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொண்டனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் கலைந்து சென்றனா். இ்ந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story