கும்பகோணம் சீதாளமாரியம்மன் ஆதிவிநாயகர் கோவிலில் சித்திரை திருவிழா
கும்பகோணம் சீதாளமாரியம்மன் ஆதிவிநாயகர் கோவிலில் சித்திரை திருவிழா
திருவிடைமருதூர்:
கும்பகோணத்தில் ஆணைக்காரன் பாளையம் தெருவில் உள்ள சீதாளமாரியம்மன் ஆதிவிநாயகர் கோவில் உள்ளது. இங்கு சித்திரை திருவிழாவையொட்டி கடந்த 12-ந்தேதி கணபதி ஹோமம் நடைபெற்றது. தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் மகாமகம் குளத்திலிருந்து வேல் சக்தி கரகம், அக்னிசட்டி, பால்குடம், காவடி-அலகு காவடிகளை முக்கிய வீதி வழியாக எடுத்து வந்து கோவிலை வந்தடைந்தனர். அப்போது சீதாளமாரியம்மன் சிறப்பு மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். நாளை விடையாற்றியுடன் சித்திரை திருவிழா நிறைவடைகிறது. இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் தெருமக்கள், நாட்டாண்மைகள் செய்து வருகின்றனர்.
Related Tags :
Next Story