ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளை விசாரணை குழுத்தலைவர் டேவிதார் ஆய்வு


ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளை விசாரணை குழுத்தலைவர் டேவிதார் ஆய்வு
x
தினத்தந்தி 15 May 2022 1:54 AM IST (Updated: 15 May 2022 1:54 AM IST)
t-max-icont-min-icon

சேலம் மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளை விசாரணைக்குழு தலைவர் டேவிதார் ஆய்வு செய்தார்.

சேலம்:
சேலம் மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 85 பணிகள் ரூ.968 கோடியே 67 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ள திட்டமிடப்பட்டது. இதில் இதுவரை ரூ.298 கோடியே 81 லட்சம் மதிப்பிலான 48 பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. ரூ.664 கோடியே 46 லட்சம் மதிப்பில் 36 பணிகள் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் முடிவுற்ற மற்றும் நடைபெற்று வரும் திட்டப்பணிகளை நேற்று ஒரு நபர் விசாரனை குழுத்தலைவர் டேவிதார் ஆய்வு செய்தார்.
அதாவது, பழைய பஸ் நிலையம் அருகே உள்ள அடுக்குமாடி வாகனங்கள் நிறுத்துமிடம், திடக்கழிவு மேலாண்மை நுண்ணுயிர் உரக்கிடங்கு, தொங்கும் பூங்கா பல்நோக்கு அரங்கம், பள்ளப்பட்டி ஏரியை அபிவிருத்தி செய்து அழகுப்படுத்தும் பணி, குமரகிரி ஏரியை புனரமைத்தல், அண்ணா பூங்கா மேம்படுத்துதல், பள்ளப்பட்டி பகுதியில் அறிவியல் பூங்கா அமைத்தல் உள்ளிட்ட பல திட்டபணிகளை விசாரனை குழுத்தலைவர் டேவிதார் நேரில் ஆய்வு செய்தார்.
அப்போது திட்டப்பணிகள் குறித்து அதிகாரிகளுக்கு சில ஆலோசனை வழங்கினார். இந்த ஆய்வின் போது மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ், மாநகர பொறியாளர் ரவி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Next Story