கண்மாய் மடையில் வட்டெழுத்து கல்வெட்டு
உசிலம்பட்டி அருகே கண்மாய் மடையில் வட்டெழுத்து கல்வெட்டு குறித்து கல்லூரி வரலாற்றுத்துறை பேராசிரியர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.
உசிலம்பட்டி
உசிலம்பட்டி அருகே கண்மாய் மடையில் வட்டெழுத்து கல்வெட்டு குறித்து கல்லூரி வரலாற்றுத்துறை பேராசிரியர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.
ஆய்வு
மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகா திருமாணிக்கம் பஞ்சாயத்துக்கு உட்பட்டது டி.மீனாட்சிபுரம். இந்த கிராமத்தின் அருகே உள்ள திருமாணிக்கம் பெரிய கண்மாயின் மடைக்கல்லில் எழுத்துக்கள் காணப்படுவதாகவும், அது எந்த காலகட்டத்தைச் சேர்ந்தவை என தெரியாமல் இருந்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து தகவல் கிடைத்ததும், டி.மீனாட்சிபுரம் பகுதிக்கு வந்த மதுரை மன்னர் திருமலைநாயக்கர் கல்லூரி வரலாற்றுத்துறை பேராசிரியர்களான பிறையா மற்றும் ராஜகோபாலன் ஆகியோர் திருமாணிக்கம் கண்மாய் பகுதியில் இருந்த மடைக்கல்லில் ஆய்வு மேற்கொண்டனர்.
வட்டெழுத்து கல்வெட்டு
இந்த ஆய்வில் மடைக்கல்லில் 12 வரிகள் கொண்ட கி.பி. 9-10 ம் நூற்றாண்டைச் சேர்ந்த வட்டெழுத்து கல்வெட்டு பொறிக்கப்பட்டு இருந்ததை அவர்கள் கண்டறிந்தனர். இந்த கல்வெட்டில் கூடர்க்குடியை சேர்ந்த சங்கத்தட்டான் என்ற தங்க ஆபரணங்கள் செய்யும் வியாபாரி, இந்த வேம்பங்குடி மடையை கட்டியது மட்டுமல்லாது, அதை பாதுகாக்கும் பொருட்டு அதற்கு வரி கொடுத்து வந்ததாகவும், இந்த மடை மூலம் வருடத்திற்கு 3 போகம் சாகுபடி செய்து கொள்ள குடி மக்களுக்கு நன்மை செய்வித்தான் என பொறிக்கப்பட்டு இருப்பதாக வரலாற்றுத்துறை பேராசிரியர்கள் தெரிவித்தனர்.
மேலும் கி.பி.9 மற்றும் 10-ம் நூற்றாண்டுகளிலேயே இப்பகுதி செழுமையாக இருந்த சூழலில் தற்போது இந்த கண்மாய் வறண்டு காணப்படுவதால் கண்மாய்க்கு வரும் வரத்துக் கால்வாய்களை சீரமைத்து கண்மாயில் நீரை பெருக்கினால் இப்பகுதி மக்கள் வரலாற்று பெருமைமிக்க பயன்களை பெறுவார்கள் என தெரிவித்தனர்.
Related Tags :
Next Story