மின்வினியோக புகார்களை வாட்ஸ்- அப் எண்ணில் தெரிவிக்கலாம்; கலெக்டர் தகவல்


மின்வினியோக புகார்களை வாட்ஸ்- அப் எண்ணில் தெரிவிக்கலாம்; கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 15 May 2022 2:32 AM IST (Updated: 15 May 2022 2:32 AM IST)
t-max-icont-min-icon

மின்வினியோக புகார்களை வாட்ஸ்-அப் எண்ணில் தெரிவிக்கலாம் என்று மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்து உள்ளார்.

ஈரோடு
மின்வினியோக புகார்களை வாட்ஸ்-அப் எண்ணில் தெரிவிக்கலாம் என்று மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்து உள்ளார்.
மின் சாதனங்கள்
ஈரோடு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருந்ததாவது:-
பொதுமக்கள் மின்சார ஒயரிங் வேலைகளை அரசு உரிமம் பெற்றுள்ள மின் ஒப்பந்ததாரர்கள்       மூலமாக மட்டுமே மேற்கொள்ள வேண்டும். ஐ.எஸ்.ஐ. முத்திரை பெற்ற தரமான மின்சார சாதனங்களை வாங்கி பயன்படுத்த வேண்டும். உடைந்த சுவிட்சுகளையும், பிளக்குகளையும் உடனடியாக மாற்றி அமைக்க வேண்டும். பழுதடைந்த மின்சார சாதனங்களை மீண்டும் பயன்படுத்தக்கூடாது.
5 ஆண்டுகளுக்கு ஒரு முறை வீட்டில் உள்ள மின் இணைப்புகளை சோதனை செய்து கொள்ளலாம். குளியல் அறை, கழிப்பறை போன்ற ஈரமான இடங்களிலும் சுவிட்சுகளை பொருத்த வேண்டாம். அதேபோல் மின்கம்பங்களில் கால்நடைகளை கட்டக்கூடாது. மேல்நிலை மின்கம்பிகளுக்கு அருகில் உள்ள மரக்கிளைகளை வெட்டுவதற்கு மின்சார வாரிய அலுவலர்களை அணுக வேண்டும்.
புகார்
மின் சாதனங்கள் உபயோகப்படுத்தாதபோது சுவிட்ச் ஆப் செய்து வைக்க வேண்டும். மின்சாரத்தினால் ஏற்பட்ட தீயை தண்ணீர் கொண்டு அணைக்க முயற்சிக்க வேண்டாம். தீ விபத்து ஏற்பட்டால், உடனடியாக மெயின் சுவிட்சை அணைத்து விட வேண்டும்.
இடி அல்லது மின்னல் ஏற்படும்போது வெட்டவெளி பகுதியில் இருக்கக்கூடாது. கட்டிடங்கள், உலோகத்தால் கூரைஅமைக்கப்பட்ட பஸ், கார், வேன் போன்ற வாகனங்களில் தஞ்சமடையலாம். இடி அல்லது மின்னலின்போது டி.வி., மிக்சி, கிரைண்டர், கணினி, தொலைபேசி அருகில் இருக்கக்கூடாது. மின் கம்பம் சாய்ந்து விழுந்தாலோ, மின் கம்பி அறுந்து விழுந்தாலோ 9498794987 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம். மேலும், 9445851912 என்ற வாட்ஸ்அப் எண்ணிலும் புகார் அளிக்கலாம்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.

Next Story