இந்து முன்னணியினர் 3-வது நாளாக போராட்டம்
பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் செவிலியர் திடீரென்று இறந்ததைக் கண்டித்து, இந்து முன்னணியினர் 3-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர்
நெல்லை:
பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் செவிலியர் திடீரென்று இறந்ததைக் கண்டித்து, இந்து முன்னணியினர் 3-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
செவிலியர் திடீர் சாவு
தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலையைச் சேர்ந்தவர் சின்னதம்பி. இவர் இந்து முன்னணி நகர துணைத்தலைவராக உள்ளார். இவருடைய மனைவி முருகலட்சுமி, பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் செவிலியராக பணியாற்றி வந்தார்.
இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென்று உடல் நலக்குறைவு ஏற்பட்டதால், பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். ஆனாலும் சிகிச்சை பலனின்றி கடந்த 12-ந்தேதி முருகலட்சுமி பரிதாபமாக இறந்தார்.
இதற்கிடையே டாக்டர்களின் கவனக்குறைவால்தான் முருகலட்சுமி இறந்ததாக கூறியும், அவரது சாவுக்கு நீதி கேட்டும், அவரது உடலை பெற மறுத்த உறவினர்கள், இந்து முன்னணியினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் முருகலட்சுமியின் குடும்பத்தினருக்கு ரூ.50 லட்சம் நிவாரண உதவி வழங்க வேண்டும் அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் தவறு செய்த டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
3-வது நாளாக போராட்டம்
நேற்று 3-வது நாளாக பாளையங்கோட்ைட ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரி டீன் அலுவலகம் முன்பு இந்து முன்னணியினர் மாநில இணை அமைப்பாளர் பொன்னையா, மாநில செயலாளர் குற்றாலநாதன் ஆகியோர் தலைமையில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நெல்லை கோட்ட செயலாளர் சக்திவேலன், தூத்துக்குடி மாவட்ட சலவைத் தொழிலாளர் சங்க தலைவர் சண்முகசுந்தரம், கோவில்பட்டி பகுதி சலவைத் தொழிலாளர் சங்க தலைவர் சுருளிராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story