மது விற்றவர் கைது


மது விற்றவர் கைது
x
தினத்தந்தி 15 May 2022 3:19 AM IST (Updated: 15 May 2022 3:19 AM IST)
t-max-icont-min-icon

மது விற்றவர் கைது செய்யப்பட்டார்.

ஆண்டிமடம்:
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிச்சைமணி மற்றும் போலீசார் ஆண்டிமடம் அருகே உள்ள கீழநெடுவாய் கிழக்குத் தெரு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அதே பகுதியில் ஒருவர் மதுபான பாட்டில்களை சட்டவிரோதமாக பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர் அதே பகுதியை சேர்ந்த ஆனந்த் என்ற டேவிட் சின்னதுரை(வயது 35) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரிடம் இருந்த மதுபான பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்து, அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Tags :
Next Story