தனியார் சர்க்கரை ஆலையில் எந்திரத்தில் கை சிக்கி ஊழியர் சாவு


தனியார் சர்க்கரை ஆலையில் எந்திரத்தில் கை சிக்கி ஊழியர் சாவு
x
தினத்தந்தி 15 May 2022 3:24 AM IST (Updated: 15 May 2022 3:24 AM IST)
t-max-icont-min-icon

தனியார் சர்க்கரை ஆலையில் எந்திரத்தில் கை சிக்கி ஊழியர் உயிரிழந்தார்.

வேப்பந்தட்டை:
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள உடும்பியத்தில் தனியார் சர்க்கரை ஆலை உள்ளது. இந்த சர்க்கரை ஆலையில் மெஷின் ஆபரேட்டராக திருச்சி மாவட்டம் லால்குடியை சேர்ந்த தங்கராசுவின் மகன் வெற்றிவேல்(வயது 23) வேலை பார்த்து வந்தார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு கரும்பு அரைத்து சக்கை வெளியேறும் இடத்தில் பணியாற்றியபோது எதிர்பாராதவிதமாக எந்திரத்தில் வெற்றிவேலின் கை சிக்கியது. இதில் அவர் படுகாயமடைந்தார். இதையடுத்து அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறிவிட்டனர்.
இந்த சம்பவம் தொடர்பாக அரும்பாவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சர்க்கரை ஆலை எந்திரத்தில் ஊழியர் கை சிக்கி இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Tags :
Next Story