பெரம்பலூர் கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம்


பெரம்பலூர் கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 15 May 2022 3:24 AM IST (Updated: 15 May 2022 3:24 AM IST)
t-max-icont-min-icon

பெரம்பலூர் கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

பெரம்பலூர்:
தமிழ்நாடு தொடக்க கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவின் பெரம்பலூர் மாவட்ட அமைப்பின் சார்பில் போராட்ட ஆயத்த கூட்டம் நேற்று நடந்தது. பெரம்பலூரில் நடந்த இந்த கூட்டத்திற்கு தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில துணை செயலாளரும், பெரம்பலூர் மாவட்ட செயலாளருமான ராஜேந்திரன் தலைமை தாங்கினார். மாநில அமைப்பின் முடிவின்படி 18 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 18-ந்தேதி காலை 10 மணியளவில் பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக தமிழக ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட செயலாளர் செல்வராஜ் வரவேற்றார். முடிவில் தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட செயலாளர் அருள்ஜோதி நன்றி கூறினார்.

Next Story