நூல் விலை உயர்வு காரணமாக சென்னிமலையில் 5 நாட்கள் விசைத்தறி உற்பத்தி நிறுத்தம்; உரிமையாளர்கள் சங்கத்தினர் முடிவு
நூல் விலை உயர்வு காரணமாக சென்னிமலையில் 5 நாட்கள் விசைத்தறி உற்பத்தி நிறுத்தப்படும் என்று உரிமையாளர்கள் சங்கத்தினர் முடிவு செய்துள்ளனர்.
சென்னிமலை
நூல் விலை உயர்வு காரணமாக சென்னிமலையில் 5 நாட்கள் விசைத்தறி உற்பத்தி நிறுத்தப்படும் என்று உரிமையாளர்கள் சங்கத்தினர் முடிவு செய்துள்ளனர்.
இதுகுறித்து சென்னிமலை வட்டார விசைத்தறி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் பொன்.ஈஸ்வரமூர்த்தி, செயலாளர் எம்.பி.சவுந்தரராஜன், பொருளாளர் சி.சண்முகம் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
நூல் விலை உயர்வு
கடந்த 2 மாத காலமாக கடுமையான நூல் விலை ஏற்றத்தை தாக்கு பிடிக்க முடியாமல் இந்த ஜவுளி தொழில் ஆட்டம் கண்டு விட்டது. ஒரு மாதத்தில் கிலோவுக்கு 30 ரூபாயில் இருந்து 40 ரூபாய் என்ற வகையில் நூல் விலை ஏற்றம் அடைந்துள்ளது. இதனால் இந்த ஜவுளி தொழில் கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத வகையில் நிறைவடைந்துள்ளது.
எனவே மத்திய அரசை கண்டிக்கும் வகையில் தமிழ்நாடு முழுவதும் உள்ள ஜவுளி உற்பத்தியாளர்கள் மற்றும் ஈரோடு டெக்ஸ்டைல் மெர்ச்சன்ட்ஸ் அசோசியேசனுடன் இணைந்து நாளை 16-ந் தேதி (திங்கட்கிழமை) மற்றும் நாளை மறுநாள் 17-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) ஆகிய 2 தினங்கள் ஜவுளி தொழில் சார்ந்த அனைத்து விதமான செயல்பாட்டினையும் நிறுத்தி வைக்க சங்கத்தின் அவசர கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
உற்பத்தி நிறுத்தம்
அதன்படி அந்த 2 நாட்களுக்கு சென்னிமலை நகரத்தில் உள்ள ஜவுளி மற்றும் நூல் கடைகள் உள்ளிட்ட ஜவுளி தொழில் நிறுவனங்கள் அனைத்தையும் இயக்குவதில்லை என ஏகமனதாக முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே அனைத்து ஜவுளி சார்ந்த உற்பத்தியாளர்களும் ஜவுளி தொழிலை காப்பாற்றுகின்ற நடவடிக்கைக்கு ஆதரவு அளித்து தங்கள் தொழிலாளர்களுக்கு விடுமுறை அளிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.
இதுதவிர 18-ந் தேதி முதல் 22-ந் தேதி வரை சென்னிமலை வட்டார விசைத்தறி உற்பத்தியாளர் சங்கம் சார்பில் பெட்சீட் ரகங்கள் உற்பத்தி செய்ய மாட்டோம். நூலும் கொள்முதல் செய்யப்பட மாட்டாது. துணி விற்பனை மற்றும் லாரி பார்சல் புக்கிங் செய்பவர்கள் வருகிற 18-ந் தேதி முதல் 22-ந் தேதி வரை செய்து கொள்ளலாம்
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளனர்.
Related Tags :
Next Story