தொடர்ந்து வரத்து குறைவு ஈரோட்டில் ஒரு கிலோ தக்காளி ரூ.80-க்கு விற்பனை
ஈரோட்டிற்கு தக்காளி வரத்து தொடர்ந்து குறைந்ததால் ஒரு கிலோ ரூ.80-க்கு விற்பனை செய்யப்பட்டது.
ஈரோடு
ஈரோட்டிற்கு தக்காளி வரத்து தொடர்ந்து குறைந்ததால் ஒரு கிலோ ரூ.80-க்கு விற்பனை செய்யப்பட்டது.
தக்காளி வரத்து குறைவு
ஈரோடு வ.உ.சி மைதானத்தில் நேதாஜி தினசரி காய்கறி மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இங்கு 700-க்கும் மேற்பட்ட காய்கறி கடைகள் செயல்பட்டு வருகிறது. சத்தியமங்கலம், தாளவாடி, கிருஷ்ணகிரி, ஒட்டன்சத்திரம், கர்நாடக மாநிலம் கோலார், ஆந்திரா போன்ற பகுதிகளில் இருந்து காய்கறிகள் வருகின்றன.
குறிப்பாக ஈரோடு மார்க்கெட்டிற்கு தாளவாடி, சத்தியமங்கலம், கோலார் போன்ற பகுதியில் இருந்து தினந்தோறும் 3 ஆயிரம் முதல் 7 ஆயிரம் பெட்டிகள் வரை தக்காளி வந்தது. ஆனால் சமீப காலமாக தொடர்ந்து வரத்து குறைந்து வருகிறது. நேற்று ஆந்திரா மாநிலத்தில் இருந்து மட்டும் வெறும் 900 பெட்டிகள் தக்காளி மட்டுமே வந்தது.
ரூ.80-க்கு விற்பனை
இதனால் தக்காளி விலை உயர்ந்து காணப்பட்டது. நேற்று ஒரு கிலோ தக்காளி ரூ.70 முதல் ரூ.80 வரை விற்பனை ஆனது. தாளவாடி, சத்தியமங்கலம் போன்ற பகுதிகளில் இருந்து தக்காளி வரத்து தொடங்கினால் விலை குறைய வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர். இதேபோல், முள்ளங்கி, அவரைக்காய், பீன்ஸ், முருங்கைக்காய் விலையும் கடந்த வாரத்தை விட இந்த வாரம் அதிகரித்துள்ளது.
நேதாஜி தினசரி காய்கறி மார்க்கெட்டில் நேற்று விற்கப்பட்ட காய்கறிகளின் விலை கிலோவில் வருமாறு:-
கத்தரிக்காய் - ரூ.30, முள்ளங்கி- ரூ.40, அவரைக்காய் -ரூ.100, பாகற்காய்-ரூ.50, வெண்டைக்காய் -ரூ.40, பீட்ரூட் -ரூ.50, பீன்ஸ் -ரூ.80 புடலங்காய் -ரூ.40, முருங்கைக்காய் -ரூ.80, முட்டைக்கோஸ் - ரூ.25, காலிபிளவர் -ரூ.25, மிளகாய் -ரூ.40, சின்ன வெங்காயம்- ரூ.20, பெரிய வெங்காயம் -ரூ.20.
Related Tags :
Next Story