தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் 5 மின் உற்பத்தி எந்திரங்களும் நிறுத்தம்
தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் 5 மின் உற்பத்தி எந்திரங்களும் நிறுத்தப்பட்டன. இதனால் மின் உற்பத்தி முழுமையாக பாதிக்கப்பட்டது.
தூத்துக்குடி:
தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் 5 மின் உற்பத்தி எந்திரங்களும் நிறுத்தப்பட்டன. இதனால் மின் உற்பத்தி முழுமையாக பாதிக்கப்பட்டது.
அனல்மின் நிலையம்
தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் தலா 210 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 5 மின் உற்பத்தி எந்திரங்கள் உள்ளன. சமீபத்தில் நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக அவ்வப்போது மின் உற்பத்தி எந்திரங்கள் நிறுத்தி வைக்கப்பட்டன. மேலும் மின்தேவைப்பாடு குறைந்தபோதும், மின் உற்பத்தி எந்திரங்கள் நிறுத்தி இயக்கப்பட்டன.
இதனால் பகல் நேரங்களில் பெரும்பாலும் ஒரு மின் உற்பத்தி எந்திரம் மட்டுமே இயக்கப்பட்டது. மாலையில் மின்தேவை அதிகரிப்பை கருத்தில் கொண்டு, அனைத்து மின் உற்பத்தி எந்திரங்களும் இயக்கப்பட்டு முழு வீச்சில் மின் உற்பத்தி நடைபெற்றது.
மின் உற்பத்தி பாதிப்பு
இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமையான நேற்று விடுமுறை நாள் என்பதாலும், சூரிய ஒளி மின் உற்பத்தி, காற்றாலை மின் உற்பத்தி அதிகரித்து இருந்ததாலும், மின்சார தேவை வெகுவாக குறைந்ததாக கூறப்படுகிறது.
இதனால் தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் உள்ள 5 மின் உற்பத்தி எந்திரங்களும் நேற்று காலையில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. இதனால் மின் உற்பத்தி முழுமையாக பாதிக்கப்பட்டது.
---
Related Tags :
Next Story