குன்னூர் காட்டேரி பூங்காவில் குவிந்த சுற்றுலா பயணிகள்
குன்னூர் காட்டேரி பூங்காவில் குவிந்த சுற்றுலா பயணிகள் கண்கவரும் மலர்களை கண்டு ரசித்தனர்.
குன்னூர்
குன்னூர் காட்டெரி பூங்காவில் குவிந்த சுற்றுலா பயணிகள் கண்கவரும் மலர்களை கண்டு ரசித்தனர்.
காட்டேரி பூங்கா
குன்னுார்- மேட்டுப்பாளையம் சாலையில் காட்டேரி பூங்கா உள்ளது. இந்த பூங்கா தமிழக அரசின் தோட்டக்கலைத் துறை நிர்வாகத்தின் கீழ் உள்ளது. இயற்கை சூழலில் இந்த பூங்கா 5 ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ளது. பூங்காவிலிருந்து பார்க்கும் போது எதிரே பச்சை கம்பளம் போர்த்தியது போன்ற தேயிலை தோட்டங்கள் மற்றும் வனப்பகுதியும் காண்போரின் கண்களை குளிர்ச்சியாக்கும்.
குன்னூர்-மேட்டுப்பாளையத்திலிருந்து குன்னூர் மற்றும் ஊட்டி வரும் சுற்றுலா பயணிகள் ஓய்விற்காக இந்த பூங்காவை கண்டு ரசித்து செல்கிறார்கள். இதேபோல் கடந்த சில தினங்களாகவே காட்டேரி பூங்காவில் சுற்றுலா பயணிகள் குவிந்து வருகிறார்கள்.
மலர்களை ரசித்தனர்
இந்த ஆண்டு கோடை சீசனுக்காக, மேரி கோல்டு, சால்வியா, பிளாக்ஸ், டேலியா, பேன்சி செல்லோஷியா உள்ளிட்ட 30 வகைகள் கொண்ட 1 லட்சத்து 70 ஆயிரம் மலர் நாற்றுக்கள் நடவு செய்யப்பட்டன. அவற்றில் பெரும்பாலான மலர்ச்செடிகள் தற்போது பூத்து குலுங்குகின்றன. கண்கவரும் வகையில் உள்ள மலர்களை சுற்றுலா பயணிகள் ரசித்து வருகிறார்கள்.
மேலும், சுற்றுலாபயணிகள், மலர்களிடையே நின்று புகைப்படம் மற்றும் 'செல்பி' எடுத்தும், பசுமை போர்த்திய புல்வெளிகளில் விளையாடவும் ஆர்வம் காட்டுகின்றனர். இனி வரும் நாட்களில் பூங்காவில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Related Tags :
Next Story