தூத்துக்குடியில் வளரி பயிற்சி முகாம்


தூத்துக்குடியில் வளரி பயிற்சி முகாம்
x
தினத்தந்தி 15 May 2022 6:21 PM IST (Updated: 15 May 2022 6:21 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் இளைஞர்களுக்கு வளரி பயிற்சி முகாம் நடந்தது.

தூத்துக்குடி:
தூத்துக்குடியில் இளைஞர்களுக்கு வளரி பயிற்சி முகாம் நடந்தது. இதில் திரளான இளைஞர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்.
வளரி வீச்சு
பண்டைய காலத்தில் பெண்கள் காகம் பறவைகளை விரட்டுவதற்காக வளரி பயன்படுத்தப்பட்டது. அதனை மன்னர்கள் போர்க்கருவியாக மாற்றி பயன்படுத்த தொடங்கினர். இந்த வளரி தற்போது விளையாட்டாக மாறி உள்ளது. வெளிநாடுகளில் வளரி வீசும் விளையாட்டு சிறப்பாக உள்ளது. இந்தியாவில் இன்னும் அங்கீகாரம் பெறவில்லை என்றாலும் பல்வேறு விளையாட்டு சங்கங்கள் சார்பில் வளரி வீசும் விளையாட்டுகள் நடத்தப்படுகின்றன. இதில் வேகமாக வளரி வீசுதல், துல்லியமாக வீசுதல், துரித வீச்சு என்று 8 வகையான போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
பயிற்சி முகாம்
இந்த வளரி விளையாட்டு குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு மற்றும் பயிற்சி அளிக்கும் வகையில் வளரி பயிற்சி முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி தூத்துக்குடி மாவட்ட விளையாட்டு அரங்கில் தேவராஜ் வஸ்தாவி சிலம்பாட்ட கழகம் மற்றும் மருது வளரிகள் இணைந்து நடத்தும் வளரி பயிற்சி முகாம் நேற்று நடந்தது. பயிற்சியை மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் பேட்ரிக் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். மாநகராட்சி கவுன்சிலர் அந்தோணி பிரகாஷ் மார்சிலின் முன்னிலை வகித்தார். பயிற்சியாளர்கள் அருண் அந்தோணி, சீமான், கார்த்திக் ராஜா ஆகியோர் கலந்து கொண்டு பயிற்சி அளித்தனர். பயிற்சியில் திரளான இளைஞர்கள் பங்கேற்றனர்.

Next Story