பிரியாணி கடைகளில் கலெக்டர் திடீர் ஆய்வு


பிரியாணி கடைகளில் கலெக்டர் திடீர் ஆய்வு
x
தினத்தந்தி 15 May 2022 7:09 PM IST (Updated: 15 May 2022 7:09 PM IST)
t-max-icont-min-icon

ஆற்காட்டில்உள்ள பிரியாணி கடைகளில் கலெக்டர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

ஆற்காடு

ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமையில் மாவட்டம் முழுவதும் மொத்த வியாபார கடைகள் மற்றும் சில்லரை வியாபார கடைகளில் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினால் அபராதம் விதித்து பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றனர். இந்தநிலையில் நேற்று ஆற்காடு அண்ணாசிலை, புதிய வேலூர் மெயின் ரோடு பகுதிகளில் உள்ள பிரியாணிக் கடைகளில் கலெக்டர் பாஸ்கரன் பாண்டியன் திடீர் ஆய்வு செய்தார்.

அப்போது பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தாமல் மந்தாரை இலைகளை கொண்டு பிரியாணியை வியாபாரம் செய்த கடை உரிமையாளரை பாராட்டினார். பின்னர் இதே போன்று செயல்படும்படி அறிவுரை வழங்கினார்.

Next Story