கணவர் மது குடிக்க பணம் கேட்டு தொந்தரவு செய்ததால் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
கணவர் மது குடிக்க பணம் கேட்டு தொந்தரவு செய்ததால் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
நாமகிரிப்பேட்டை:
மங்களபுரம் அருகே கணவர் மது குடிக்க பணம் கேட்டு தொந்தரவு செய்ததால் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தகராறு
நாமகிரிப்பேட்டை ஒன்றியம் மங்களபுரம் அருகே உள்ள மூலக்காடு கிராமத்தை சேர்ந்தவர் அஜித்குமார் (வயது 22). கூலித்தொழிலாளி. இவருக்கும் வாழப்பாடி அருகே உள்ள மன்னார்பாளையத்தை சேர்ந்த கிருத்திகா (20) என்ற பெண்ணுக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. 2 குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில் அஜித்குமார் அடிக்கடி மது குடித்து விட்டு மனைவியிடம் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும் சரியாக வேலைக்கு செல்லாமலும், மது குடிக்க பணம் கேட்டும் தொந்தரவு செய்து வந்ததாக தெரிகிறது.
விசாரணை
இதனால் மன வேதனை அடைந்த கிருத்திகா வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்து சென்ற மங்களபுரம் போலீசார் கிருத்திகாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் திருமணமான 4 ஆண்டுகளில் இளம்பெண் இறந்துள்ளதால் இதுகுறித்து உதவி கலெக்டர் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story