பந்தலூாில் அரசு பஸ் பழுதடைந்து நின்றது


பந்தலூாில் அரசு பஸ் பழுதடைந்து நின்றது
x
தினத்தந்தி 15 May 2022 7:18 PM IST (Updated: 15 May 2022 7:18 PM IST)
t-max-icont-min-icon

பந்தலூாில் அரசு பஸ் பழுதடைந்து நின்றது

பந்தலூர்

நீலகிரி மாவட்டம் பந்தலூர், உப்பட்டி, அத்திகுன்னு, பாட்டவயல், நம்பியார்குன்னு அய்யன்கொல்லி, கொளப்பள்ளி, சேரம்பாடி, தாளூர், கரியசோலை உள்பட பல்வேறு பகுதிகளுக்கு கூடலூரில் உள்ள அரசு போக்குவரத்து கழகம் மூலம் அரசு பஸ்கள் இயக்கப்படுகிறது. 
இந்த பஸ்கள் அடிக்கடி பழுதடைந்து சாலைஓரங்களில் நின்று விடுகிறது. இந்தநிலையில் கூடலூரிலிருந்து அய்யன்கொல்லிக்கு சென்ற அரசு பஸ் ஒன்று பழுதடைந்து நடுவழியில் நின்றது. இதனால் பயணிகள் நடுவழியில் இறக்கி விடப்பட்டனர். பிறகு அவர்கள் தனியார் வாகனங்களில் 2 மடங்கு கட்டணம் செலுத்தி பயணம் செய்தனர். இதனால் பயணிகள் அவதிப்பட்டனர்.

Next Story