ஊட்டியில் கட்டப்படும் மருத்துவ கல்லூரியில் தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ஆய்வு
ஊட்டியில் கட்டப்படும் மருத்துவ கல்லூரியில் தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ஆய்வு செய்தார்.
ஊட்டி
ஊட்டி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமணை கட்டுமான பணிகளை தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது பணிகளை விரைவுபடுத்திட பொதுப்பணித்துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். அதனைத் தொடர்ந்து டாக்டர் ராதாகிருஷ்ணன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து தொற்று மற்றும் தொற்றா நோய்கள் கட்டுப்படுத்துவதற்கு போர்க்கால அடிப்படையில் பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள். கொரோனா நோய் தொற்று தற்போது 100-க்கு கீழாக உள்ளது. தமிழகத்தில் இதுவரை 10.22 லட்சம் பூஸ்டர் தடுப்பூசி செலுத்த தகுதியானவர்கள். இதில் 60 வயதிற்கு மேற்பட்டவர்கள், முன்களப்பணியாளர்கள், மருத்துவப்பணியாளர்கள் ஆகியோர் 50 சதவீதம் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளனர். 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் 93.51 சதவிகிதம் தடுப்பூசி செலுத்தி கொண்டார்கள். 1.29 கோடி பேர் இன்னும் தடுப்பூசி செலுத்தி கொள்ளவில்லை. கொரோனா நோய் தொற்றிலிருந்து பாதுகாத்து கொள்ள தடுப்பூசி மிகப் பெரிய ஆயுதமாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். அப்போது அவருடன் மாவட்ட கலெக்டர் அம்ரித், ஊட்டி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமணை முதல்வர் டாக்டர் மனோகரி, துணை முதல்வர் ஜெயலிதா, பொதுப்பணித்துறை மற்றும் மருத்துவ அதிகாரிகள் இருந்தனர்.
Related Tags :
Next Story