தூத்துக்குடியில் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து பெயிண்டர் சாவு


தூத்துக்குடியில் வீட்டின் மேற்கூரை இடிந்து  விழுந்து பெயிண்டர் சாவு
x
தினத்தந்தி 15 May 2022 7:35 PM IST (Updated: 15 May 2022 7:35 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து பெயிண்டர் பரிதாபமாக பலியானார்.

தூத்துக்குடி:
தூத்துக்குடியில் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து பெயிண்டர் பரிதாபமாக இறந்தார்.
பெயிண்டர்
தூத்துக்குடி டூவிபுரம் 3-வது தெருவை சேர்ந்தவர் கோவிந்தசாமி. இவருடைய மகன் சுரேஷ் (வயது 40). பெயிண்டர். இவரது மனைவி இறந்து விட்டதால், இவரது 2 குழந்தைகள் நெல்லையில் உறவினர் வீட்டில் தங்கி படித்து வருகின்றனர். சுரேஷ் வீட்டில் தனியாக வசித்து வந்தார். அண்ணாநகரில் உள்ள அவரது தாய் தினமும் சாப்பாடு வழங்கி வந்தாராம். நேற்று மதியம் வழக்கம் போல் உணவு கொண்டு வந்தாராம். அப்போது எதிர்பாராத விதமாக வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து கிடந்தது. இதில் இடிபாடுகளுக்குள் சுரேஷ் சிக்கி கொண்டாராம். இதனால் உடல் நசுங்கிய சுரேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
சாவு
இது குறித்து தகவல் அறிந்த தூத்துக்குடி தீயணைப்பு படையினர் மற்றும் மத்திபாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயப்பிரகாஷ், தூத்துக்குடி தாசில்தார் செல்வக்குமார் உள்ளிட்டோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அங்கு இடிபாடுகளுக்குள் சிக்கி இறந்த நிலையில் கிடந்த சுரேசின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக தூத்துக்குடி மத்தியபாகம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
கடந்த 3-ந் தேதி அண்ணாநகரில் இதே போன்று வீடு இடிந்து கர்ப்பினி பெண் உள்பட 2 பேர் பலியானர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story