பேத்திக்கு ஆபாச படம் காண்பித்த முதியவருக்கு 7 ஆண்டு ஜெயில்
செல்போனில் பேத்திக்கு ஆபாச படம் காண்பித்த முதியவருக்கு 7 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்படுகறது.
மும்பை,
மும்பையை சேர்ந்த 13 வயது சிறுமி தனது தாய், தந்தை மற்றும் 70 வயது தாத்தாவுடன் வசித்து வந்தாள். கடந்த 2014-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 6-ந்தேதி வீட்டில் இருந்த சிறுமி தாத்தாவின் செல்போனை பாட்டு கேட்பதற்காக எடுத்தாள். அப்போது, இதனை கண்ட முதியவர் தனது செல்போனில் இருந்த ஆபாச படங்களை சிறுமிக்கு காண்பித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமி நடந்த சம்பவத்தை தனது பெற்றோரிடம் தெரிவித்தாள். இது குறித்து சிறுமியின் பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர்.
இந்த புகாரின் படி போலீசார் வழக்கு பதிவு செய்து முதியவரை கைது செய்தனர். மேலும் அவர் மீது சிறப்பு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கின் இறுதி கட்ட விசாரணையில் முதியவர் மீதான குற்றம் நிரூபணமானது. இதையடுத்து முதியவருக்கு 7 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு அளித்தார்.
Related Tags :
Next Story