தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டி
சாலையை சீரமைக்க வேண்டும்
திருவட்டார் நான்குமுனை சந்திப்பில் இருந்து ஆதிகேசவப் பெருமாள் கோவில் செல்லும் சாலை உள்ளது. இந்த சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் பாதசாரிகள், வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சுந்தரம் பிள்ளை, திருவட்டார்.
மின்விளக்கு இல்லாத மின்கம்பம்
திருவட்டார் சந்தை எதிர்புறம் மின்கம்பம் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த மின்கம்பத்தில் மின்விளக்கு இல்லாததால், இரவு நேரங்களில் அந்த பகுதி இருள்சூழ்ந்து காணப்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கம்பத்தில் மின்விளக்கு பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-வினோத், திருவட்டார்.
வடிகால் வசதி தேவை
மணவாளக்குறிச்சி பேரூராட்சிக்குட்பட்ட பாபுஜி தெரு உள்ளது. இந்த தெருவில் வடிகால் வசதி இல்லாததால் மழை நேரங்களில் மழைநீர் தேங்கி குளம் போல் காட்சி அளிக்கிறது. இதனால் கொசுக்கள் உற்பத்தியாகி தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வடிகால் வசதி ஏற்படுத்தி மழைநீர் வடிந்தோட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஸ்ரீவித்யா, பாபுஜி தெரு, மணவாளக்குறிச்சி.
நாய்கள் தொல்லை
தாழக்குடியில் உள்ள தெருக்களில் நாய்கள் அதிக அளவில் சுற்றித் திரிகின்றன. இதனால் அந்த வழியாக நடந்தும், வாகனங்களிலும் செல்பவர்களை கடிக்க துரத்துகின்றன. இதன் காரணமாக அந்த பகுதியை கடந்து செல்பவர்கள் விபத்தில் சிக்கி வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ராஜேஷ், தாழக்குடி.
சேதமடைந்த சாலை
ரீத்தாபுரம் பேரூராட்சிக்குட்பட்ட 4-வது வார்டு கரையாக்குளம் செம்பொன்விளை சாலை உள்ளது. இந்த சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. மேலும் சாலையில் மிகப்பெரிய பள்ளங்களும் உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி வருகின்றனர். எனவே வாகன ஓட்டிகளின் நலன்கருதி சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-ரவி, ரீத்தாபுரம்.
நடவடிக்கை எடுக்க வேண்டும்
ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரி அருகே சாலையின் ஓரத்தில் குடிநீர் குழாய் உள்ளது. இந்த குழாயில் உள்ள நல்லி பழுதடைந்து காணப்படுகிறது. இதனால் அந்த குழாயில் வரும் தண்ணீர் வீணாக வெளியேறி கழிவுநீர் ஓடையில் பாய்கிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பழுதடைந்த நல்லியை மாற்றி, புதிய நல்லி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-டேனியல், நேசமணிநகர்.
Related Tags :
Next Story