கிணத்துக்கடவில் புதர்மண்டிக் கிடக்கும் மாமாங்கம் ஆறு சீரமைக்கப்பட வேண்டும் என்று விவசாயிகள் எதிர்பார்த்து உள்ளனர்
கிணத்துக்கடவில் புதர்மண்டிக் கிடக்கும் மாமாங்கம் ஆறு சீரமைக்கப்பட வேண்டும் என்று விவசாயிகள் எதிர்பார்த்து உள்ளனர்
கிணத்துக்கடவு
கிணத்துக்கடவில் புதர்மண்டிக் கிடக்கும் மாமாங்கம் ஆறு சீரமைக்கப்பட வேண்டும் என்று விவசாயிகள் எதிர்பார்த்து உள்ளனர்.
மாமாங்கம் ஆறு
கிணத்துக்கடவில் இருந்து ரெயில்வே நிலையம் செல்லும் வழியில் மாமாங்கம் ஆறு குறுக்கிடுகிறது.
அரசம்பாளையம், சொலவம்பாளையம், கிணத்துக்கடவு உள்ளிட்ட பகுதிகளில் பெய்யும் மழை நீர் மாமாங்கம் ஆற்றில் கலக்கிறது. அந்த தண்ணீர் பின்னர் சூலக்கல் ஆற்றில் கலந்து செல்கிறது.
மாமங்கம் ஆற்றில் தண்ணீர் ஓடுவது அங்குள்ள விளை நிலங்களுக்கும், ஆழ்துளை கிணறுகளுக்கும் முக்கிய ஆதாரமாக உள்ளது.
தற்போது மாமாங்கள் ஆற்றில் கோழிக்கழிவுகள் மற்றும் குப்பைக்கழிவுகள் கொட்டப்பட்டு உள்ளன.
புதர்மண்டி கிடக்கிறது
மேலும் ஆற்றில் ஆங்காங்கே செடிகள் அடர்ந்து வளர்ந்து புதர் மண்டிக் கிடக்கிறது. இதனால் தண்ணீர் சீராக செல்ல முடியாத நிலை உள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு கிணத்துக்கடவு பகுதியில் மழை பெய்தது. இதனால மாமாங்கம் ஆற்றில் தண் ணீர் சீராக செல்ல வழியின்றி ஆங்காங்கே தேங்கிக் கிடக்கிறது.
அந்த தண்ணீர் மாசடைந்து துர்நாற்றம் வீசுகிறது. எனவே ஆற்றில் வளர்ந்துள்ள புதர்செடிகளை அகற்றி தூர்வார வேண்டும்.
மேலும் ஆற்றில் தண்ணீர் சீராக செல்வதற்கு ஏற்ற வகையில் சீரமைக்க சம்மந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் எதிர்பார்த்து உள்ளனர்.
இது குறித்து விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கூறியதாவது
கழிவுகள் கொட்டும் அவலம்
சொலவம்பாளையம் பகுதியில் இருந்து கிணத்துக்கடவு வழியாக செல்லும் ஆற்றுக்கு மாமாங்கம் ஆறு என்று பெயர். கிணத்துக்க டவு பகுதிகளில் பெய்யும் மழை நீர் மாமாங்கம் ஆறு வழியாக சூலக்கல் ஆற்றுக்கு செல்கிறது.
இதில் கிணத்துக்கடவு ரெயில் நிலையம் செல்லும் வழியில் பாலம் அருகே மாமாங்கம் ஆற்றில் தண்ணீர் தேங்கி நிற்கிறது.
அங்கு இறைச்சி கழிவுகள், இடிக்கப்பட்ட கட்டிட கழிவு பொருட்களை மர்ம நபர்கள் கொட்டி விட்டு செல்கின்றனர். மேலும் ஆற்றில் புதர்மண்டி காணப்படுகிறது.
இதனால் அந்த ஆற்றில் தண்ணீர் தேங்கி நிற்கி, கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதன் காரணமாக பொதுமக்களுக்கு நோய் பரவும் அபாயம் உள்ளது.
விவசாயம் மேம்படும்
எனவே ஆற்றில் கழிவுகளை கொட்டும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தண்ணீர் நிற்காமல் செல்வதற்கு வசதியாக ஆற்றை சீரமைத்தால் அந்த பகுதியில் விவசாயம் மேம்படும்.
அதோடு நிலத்தடி நீர்மட்டம் உயர வாய்ப்பு ஏற்படும். இதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Related Tags :
Next Story