முத்துமாரியம்மன் கோவிலில் கூழ்வார்க்கும் திருவிழா


முத்துமாரியம்மன் கோவிலில் கூழ்வார்க்கும் திருவிழா
x
தினத்தந்தி 15 May 2022 9:06 PM IST (Updated: 15 May 2022 9:06 PM IST)
t-max-icont-min-icon

ஐபேடு கிராமத்தில் முத்துமாரியம்மன் கோவிலில் கூழ்வார்க்கும் திருவிழா நடந்தது.

சோளிங்கர்

ராணிப்பேட்டைமாவட்டம் சோளிங்கரை அடுத்த ஐபேடு கிராமத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோவிலில் கூழ்வார்க்கும் திருவிழா நடந்தது. அதில் கிராம மக்களும், பக்தர்களும் என 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பால்குடம் எடுத்து மங்கள வாத்தியங்கள் இசைக்க வீதிகளில் ஊர்வலமாக சென்று முத்துமாரியம்மனுக்கு பால்குட அபிஷேகம் செய்தனர். 

அதைத்தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள் செய்யப்பட்டது. மூலவர் தாயாருக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். அதைத்தொடர்ந்து கூர்வார்க்கும் நிகழ்ச்சி நடந்தது. பக்தர்கள் மஞ்சள், சந்தனம், பழம், பூ, மாலை, வஸ்திரம் ஆகியவற்றை தாம்பூல தட்டில் வைத்து பூசாரியிடம் சமர்ப்பித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். 
விழாவில் ஒன்றியக்குழு உறுப்பினர் சாவித்திரி பெருமாள், ஊர் நாட்டாமைதாரர்கள் ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

Next Story