மரக்கட்டையால் தாக்கி வாலிபர் படுகொலை 6 பேர் கைது
மரக்கட்டையால் தாக்கி வாலிபர் படுகொலை 6 பேர் கைது
பெருமாநல்லூர்
பெருமாநல்லூர் அருகே டாஸ்மாக் பாரில் காலி நாற்காலியை எடுக்க ஏற்பட்ட தகராறில் வாலிபரை மரக்கட்டையால் தாக்கி அடித்துக்கொன்ற 6 பேரை ேபாலீசார் கைது செய்தனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
டாஸ்மாக் பாரில் தகராறு
திருப்பூரை அடுத்த பெருமாநல்லூர் அருகே அய்யம்பாளையத்தில் டாஸ்மாக் பார் உள்ளது. பனியன் தொழிலாளர்களுக்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் திருப்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளிலும், டாஸ்மாக் பார்களிலும் மதுப்பிரியர்களின் கூட்டம் அலைமோதியது. அது போல் அய்யம்பாளையத்தில் உள்ள டாஸ்மாக் பாரிலும் மதுப்பிரியர்கள் நிரம்பி வழிந்தனர். அங்கு இருந்து மது அருந்த நாற்காலி இல்லாமல் சிலர் நின்றவாறு மது குடித்தனர்.
இந்த டாஸ்மாக் பாரில் பெருமாநல்லூர் பாரதியார் நகரை சேர்ந்த பாலமுருகன் என்பவரது மகன் பாரதியும் (வயது 25), இவருடைய நண்பர்களான அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன் (25) உள்பட 4 பேரும் நாற்காலியில் அமர்ந்து மதுகுடித்தனர்.
சாவு
அப்போது போயம்பாளையத்தை சேர்ந்த துரைப்பாண்டியன் (25) தனது பிறந்த நாளை அங்கு கொண்டாட தனது நண்பர்களான அதே பகுதியை சேர்ந்த கவுரவ் (24), ஆனந்த் (22), விஜய் (21), சங்கர் (21) மற்றும் சுரேந்தர் (23) ஆகியோருடன் வந்தார். அப்போது பாரதியுடன் வந்தவர்களில் ஒருவர் நாற்காலியில் இருந்து எழுந்து கழிவறை சென்றார். இதனால் அந்தநாற்காலி காலியாக இருந்தது. இதையடுத்து அந்த நாற்காலியை துரைப்பாண்டியனுடன் வந்தவர்கள் எடுத்து அதில்அமர முயன்றனர். அப்போது பாரதி மற்றும் அவர்களின் நண்பருக்கும், துரைப்பாண்டியன் மற்றும் அவரின் நண்பர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதம் முற்றவே துரைப்பாண்டியனும், அவருடைய நண்பர்களும் அருகில் கிடந்த மரக்கட்டையை எடுத்து பாரதி மற்றும் மணிகண்டனையும் தாக்கினர். இதில் இவர்கள் இருவரும் பலத்த காயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தனர். இதனால் அந்த பகுதியே போர்க்களம் போல் காட்சியளித்தது. இதையடுத்து அங்கிருந்தவர்கள் காயம் அடைந்த இருவரையும் மீட்டு கோவையில் உள்ள அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி பாரதி இறந்தார். மணிகண்டனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
6 பேர் கைது
இந்த கொலை தொடர்பாக ெபருமாநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து துரைப்பாண்டியன், கவுரவ், ஆனந்த், விஜய், சங்கர் மற்றும் சுரேந்தர் ஆகிய 6 பேரையும் கைது செய்தனர். டாஸ்மாக் பாரில் காலி நாற்காலியை எடுக்க ஏற்பட்ட தகராறில் வாலிபர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story