சிந்திலுப்பு தடுப்பணை நிரம்பின


சிந்திலுப்பு தடுப்பணை நிரம்பின
x
தினத்தந்தி 15 May 2022 9:46 PM IST (Updated: 15 May 2022 9:46 PM IST)
t-max-icont-min-icon

சிந்திலுப்பு தடுப்பணை நிரம்பின

குடிமங்கலம்:
குடிமங்கலம் அருகே சிந்திலுப்பு கிராமத்தில் தடுப்பணை நிரம்பி உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
நிரம்பிய தடுப்பணை
குடிமங்கலம் ஒன்றியத்தில் மட்டும் 80-க்கும் மேற்பட்ட குளம், குட்டை தடுப்பணைகள் உள்ளன. குடிமங்கலம் ஒன்றியத்தின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்குவது உப்பாறு ஓடை. உப்பாறு ஓடையின் குறுக்கே பல இடங்களில் தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளன. 
உப்பாறு ஓடையை சுற்றியுள்ள பகுதிகளில் கிணற்றுப்பாசனம் மூலம் காய்கறி சாகுபடி நடைபெற்று வருகிறது. தடுப்பணைகள் நிரம்பும்போது இப்பகுதியில் உள்ள கிணறுகளில் நிலத்தடி நீர்மட்டம் உயர்கிறது.உப்பாறு ஓடையின் குறுக்கேகட்டப்பட்ட சிந்திலுப்பு தடுப்பணை நிரம்பி உள்ளது.
நிலத்தடி நீர்மட்டம்
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-
குடிமங்கலம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் விவசாயத்துடன் இணைந்த தொழிலாக கால்நடை வளர்ப்பு நடைபெற்று வருகிறது. இப்பகுதிகளில் கிணற்றுப்பாசனம் மூலம் காய்கறி சாகுபடி செய்யப்படுகிறது. இந்த ஆண்டு குடிமங்கலம் பகுதியில் பருவமழை கை கொடுத்ததன் காரணமாக விவசாயிகள் காய்கறி சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர்.கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கோடையிலும் தடுப்பணைகள் நிரம்பி உள்ளது. இதனால் தடுப்பணைகளை சுற்றியுள்ள பகுதிகளில் கிணறுகளில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து காணப்படுகிறது. இதன் மூலம் கிணற்றுப்பாசனம் மூலம் சாகுபடி பரப்பளவு அதிகரித்து உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story