திருக்கோவிலூரில் சிறப்பு துப்புரவு முகாம்


திருக்கோவிலூரில் சிறப்பு துப்புரவு முகாம்
x
தினத்தந்தி 15 May 2022 10:04 PM IST (Updated: 15 May 2022 10:04 PM IST)
t-max-icont-min-icon

திருக்கோவிலூரில் சிறப்பு துப்புரவு முகாம் நடைபெற்றது.

திருக்கோவிலூர், 

திருக்கோவிலூர் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சிறப்பு துப்புரவு முகாம் நடைபெற்றது. திருக்கோவிலூர் கீழையூர், சந்தப்பேட்டை ஆகிய பகுதிகளில் நடைபெற்ற சிறப்பு முகாமை நகரமன்ற தலைவர் டி.என். முருகன் தொடங்கி வைத்தார். துணைத்தலைவர் உமாமகேஸ்வரி குணா முன்னிலை வகித்தார். நகராட்சி ஆணையர் கீதா வரவேற்றார். இதில் நகராட்சி துப்புரவு பணியாளர்கள், துப்புரவு மேற்பார்வையாளர்கள் செந்தில் மற்றும் கார்த்திகேயன் ஆகியோர் மேற்பார்வையில் 40-க்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்கள் நகராட்சியின் பல்வேறு பகுதிகளில் இருந்த முட்செடிகள் மற்றும் குப்பைகளை அகற்றி துப்புரவு பணியில் ஈடுபட்டனர். 

Related Tags :
Next Story