விழுப்புரம் பொறையாத்தாள் அம்மன் கோவில் திருவிழா


விழுப்புரம்  பொறையாத்தாள் அம்மன் கோவில் திருவிழா
x
தினத்தந்தி 15 May 2022 10:13 PM IST (Updated: 15 May 2022 10:13 PM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம் பொறையாத்தாள் அம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது.


விழுப்புரம், 

விழுப்புரம் அருகே காகுப்பம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பொறையாத்தாள் அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் திருவிழா கடந்த  5-ந் தேதி சாகை வார்த்தல், காப்பு கட்டுதல், கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து, தினசரி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்தது. 

நேற்று முன்தினம் 108 திருவிளக்கு பூஜை நடந்தது. பூஜையை விழுப்புரம் துணை போலீஸ் சூப்பிரண்டு பாண்டியன் தொடங்கி வைத்தார். அதைத்தொடர்ந்து அய்யனார்குளத்தில், இருந்து கரகம் ஜொலித்து பம்பை உடுக்கை சிலம்பு உடன் கரகம் வீதி உலா வந்தது. 

தொடர்ந்து அம்மன் சந்தனகாப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்க, கிராம மக்கள்  ஊரணி பொங்கல் வைத்து, அம்மனை வழிப்பட்டனர். இதற்கான ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.

Next Story