ரேஷன்கடை விற்பனையாளர்களுக்கு புத்தாக்க பயிற்சி


ரேஷன்கடை விற்பனையாளர்களுக்கு புத்தாக்க பயிற்சி
x
தினத்தந்தி 15 May 2022 10:16 PM IST (Updated: 15 May 2022 10:16 PM IST)
t-max-icont-min-icon

கடலூரில் ரேஷன்கடை விற்பனையாளர்களுக்கு புத்தாக்க பயிற்சி நடைபெற்றது.

கடலூர், 

கடலூரில் பொதுவினியோகத்திட்ட விற்பனையாளர்களுக்கான புத்தாக்க பயிற்சி நேற்று நடைபெற்றது. இதற்கு மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் தலைமை தாங்கி பயிற்சியை தொடங்கி வைத்தார். மண்டல இணைப்பதிவாளர் நந்தகுமார், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் உதயகுமார், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளர் சிற்றரசு, நுகர்வோர் பாதுகாப்பு சங்கம் அருள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொதுவினியோகத் திட்ட துணைப் பதிவாளர் ராஜேந்திரன் வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராக கூடுதல் கலெக்டர் (வருவாய்) ரஞ்ஜீத்சிங் கலந்து கொண்டு நியாய விலைக்கடை விற்பனையாளர்களுக்கு பல்வேறு ஆலோசனைகள் வழங்கினார். பின்னர் பொதுமக்களிடம் பணிவாக நடந்து கொள்வது குறித்தும், தரமான பொருட்கள் வினியோகம் செய்வது குறித்தும் ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இதையடுத்து விற்பனையாளர்கள் அனைவரும் கலெக்டர் தலைமையில் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். இதில் நாட்டு நலப்பணி திட்ட மாவட்ட தொடர்பு அலுவலர் திருமுகம், பேராசிரியர் சுகுணா, சிதம்பரம், கடலூர், பண்ருட்டி உள்பட 7 தாலுகாக்களில் உள்ள 600 நியாயவிலைக் கடைகளில் பணியாற்றும் விற்பனையாளர்கள் கலந்து கொண்டனர். முடிவில் கடலூர் சரக துணைப் பதிவாளர் துரைசாமி நன்றி கூறினார்.


Next Story