வளர்ச்சி பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம்
கடலூரில் வளர்ச்சி பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
கடலூர்,
மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் தமிழ்நாடு குடிநீர் வழங்கல் துறை திட்ட வளர்ச்சி பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நேற்று கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக அரசு கூடுதல் தலைமை செயலாளர் ஷிவ்தாஸ் மீனா கலந்து கொண்டு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் மேற்கொள்ளப்படும் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் குடிநீர் இணைப்பு வழங்குதல் குறித்தும், திடக்கழிவு மேலாண்மை குறித்தும், பிளாஸ்டிக் இல்லா தன்மையை உருவாக்குதல் குறித்தும் அந்தந்த துறை சார்ந்த அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தினார். இதில் முடிவடையாத பணிகளை ஒருமாத காலத்திற்குள் முடிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.இதில் கூடுதல் கலெக்டர் (வருவாய்) ரஞ்ஜீத்சிங் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story