கல்லூரி மாணவி தீக்குளித்து தற்கொலை
கல்லூரி மாணவி தீக்குளித்து தற்கொலை
துமகூரு:
துமகூரு மாவட்டம் பாவகடா தாலுகா பலவள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் தேஜா(வயது 19). இவர் துமகூரு டவுனில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு பி.காம் படித்து வந்தார். இவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு வாலிபருடன் திருமணமும் நிச்சயமாகி இருந்தது. இவர்களது திருமணம் வருகிற 24 மற்றும் 25-ந் தேதிகளில் நடைபெற இருந்தது. இதற்காக தேஜாவின் பெற்றோர் திருமண அழைப்பிதழும் அச்சடித்து உறவினர்கள் உள்பட அனைவருக்கும் கொடுத்து வந்தனர். இந்த நிலையில் நேற்று காலையில் அவர் தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
அவர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் தெரியவில்லை. திருமணத்தில் விருப்பம் இல்லாததால் தேஜா தற்கொலை செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதுபற்றி பாவகடா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். கல்லூரி மாணவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story