சிதம்பரத்தில் 2 நாட்களாக சேற்றில் சிக்கிக் கிடந்த பசுமாடு மீட்பு


சிதம்பரத்தில்  2 நாட்களாக சேற்றில் சிக்கிக் கிடந்த பசுமாடு மீட்பு
x
தினத்தந்தி 15 May 2022 10:33 PM IST (Updated: 15 May 2022 10:33 PM IST)
t-max-icont-min-icon

சிதம்பரத்தில் 2 நாட்களாக சேற்றில் சிக்கிக் கிடந்த பசுமாடு மீட்பு

சிதம்பரம்

சிதம்பரம் புறவழிச்சாலை தாலுகா போலீஸ் நிலையம் அருகிலுள்ள வாய்க்காலில் சுமார் 6 அடி ஆழமுள்ள களிமண் சேற்றில் பசுமாடு ஒன்று சிக்கிக் கொண்டது. இதைப்பார்த்த அந்த பகுதியைசேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தார். அதன் பேரில் சிதம்பரம் தீயணைப்பு நிலைய அலுவலர் ராஜவேலு தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று துரிதமாக செயல்பட்டு சேற்றில் சிக்கிய பசுமாட்டை போராடி மீட்டனர். அந்த பசுமாடு கடந்த 2 நாட்களாகவே சேற்றில் சிக்கி உயிருக்கு போராடியது தெரிவந்தது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

Next Story