முண்டியம்பாக்கத்தில் ரூ.15 லட்சத்தில் கழிவுநீர் வாய்க்கால் அமைக்கும் பணி புகழேந்தி எம்.எல்.ஏ. பார்வையிட்டார்


முண்டியம்பாக்கத்தில்  ரூ.15 லட்சத்தில் கழிவுநீர் வாய்க்கால் அமைக்கும் பணி புகழேந்தி எம்.எல்.ஏ. பார்வையிட்டார்
x
தினத்தந்தி 15 May 2022 10:35 PM IST (Updated: 15 May 2022 10:35 PM IST)
t-max-icont-min-icon

முண்டியம்பாக்கத்தில் ரூ.15 லட்சத்தில் கழிவுநீர் வாய்க்கால் அமைக்கும் பணியை புகழேந்தி எம்.எல்.ஏ. பார்வையிட்டார்.


விக்கிரவாண்டி, 

விக்கிரவாண்டி ஒன்றியம் முண்டியம்பாக்கம் காலனி பகுதியில்  மாவட்ட ஊராட்சி குழு 15-வதுநிதி மானிய திட்டத்தின் கீழ் ரூ. 15 லட்சம் மதிப்பில் கழிவு நீர் வாய்க்கால் அமைக்கும் பணி நடந்து வருகிறது. 

இந்த பணியை தொகுதி எம்.எல்.ஏ. புகழேந்தி நேரில் சென்று பார்வையிட்டார். இதை தொடர்ந்து, ஒரத்தூர் ஊராட்சியில் ரூ. 10 லட்சத்தில் குடிநீர் குழாய் பதிக்கும் பணியை அவர், அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.  

மேலும், முண்டியம்பாக்கம் காலனி பகுதியில் ரூ.3 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள சாலையையும் புகழேந்தி எம்.எல்.ஏ. பார்வையிட்டார்.  ஆய்வின்போது வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நாராயணன், குலோத்துங்கன், ஒன்றிய பொறியாளர்கள் இளையராஜா, குணசேகரன், மாவட்ட கவுன்சிலர் மீனா வெங்கடேசன்,

 ஒன்றிய கவுன்சிலர் இளவரசி ஜெயபால், ஊராட்சி மன்ற தலைவர்கள் சந்திரசேகரன், லதா பிரபு, ஊராட்சி செயலாளர்கள் சண்முகம், நடராஜ், தி.மு.க. நிர்வாகிகள் ராஜசேகர், எத்திராசன், வேல்முருகன், சுதாகர், கலையரசன், மோகன், ஒரத்தூர் சுதாகர் உள்பட பலர் உடனிருந்தனர்.

Next Story