அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு
அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.
கரூா்,
வைகாசி மாத பவுர்ணமியை முன்னிட்டு கரூர் செல்லாண்டிபாளையத்தில் உள்ள பகவதி அம்மன் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதனையொட்டி பகவதி அம்மனுக்கு பால், மஞ்சள், பன்னீர், விபூதி, சந்தனம் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து பகவதி அம்மனுக்கு மஞ்சள் திருமேனி அலங்காரம் செய்யப்பட்டு, மகாதீபாராதனை காட்டப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
புன்னம் சத்திரம் அருகே கரியாம்பட்டியில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் வைகாசி மாத பவுர்ணமியை முன்னிட்டு அம்மனுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம் உள்ளிட்ட 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் அங்காள பரமேஸ்வரி அம்மன் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
அதேபோல் சேமங்கி மாரியம்மன், நொய்யல் செல்லாண்டி அம்மன், அத்திப்பாளையம் பொன்னாச்சி அம்மன், புன்னம் மாரியம்மன், அங்காள பரமேஸ்வரி அம்மன் உள்ளிட்ட பல்வேறு அம்மன் கோவில்களில் சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
Related Tags :
Next Story