கிணற்றில் குழந்தையை வீசி கொன்று பெண் தற்கொலை


கிணற்றில் குழந்தையை வீசி கொன்று பெண் தற்கொலை
x
தினத்தந்தி 15 May 2022 10:41 PM IST (Updated: 15 May 2022 10:41 PM IST)
t-max-icont-min-icon

கிணற்றில் குழந்தையை வீசி கொன்று பெண் தற்கொலை செய்து கொண்டார்

கலபுரகி: 
கலபுரகி மாவட்டம் சிஞ்சோலி புறநகர் சந்தாபுரா கங்கூனாயகா தாண்டா கிராமத்தைச் சேர்ந்தவர் கவிதா பாய்(வயது 23). இவருக்கும், சந்தாபுரா டவுன் பகுதியைச் சேர்ந்த சுரேஷ் என்பவருக்கும் கடந்த 3 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. தற்போது இவர்களுக்கு 2 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. இவர்கள் இருவரும் காதலித்து கலப்பு திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இவர்களது திருமணத்திற்கு சுரேசின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர். 

இந்த நிலையில் திருமணத்திற்கு பிறகு சுரேசும், அவரது குடும்பத்தினரும் கவிதாவுக்கு தொல்லை கொடுத்து வந்ததாகவும், கொடுமைப்படுத்தி வந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த கவிதா நேற்று காலையில் கணவனின் வீட்டில் இருந்து குழந்தையுடன் வெளியேறினார். பின்னர் அவர் வீட்டின் அருகே உள்ள ஒரு கிணற்றில் குழந்தையை வீசி கொன்றுவிட்டு தானும் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி சிஞ்சோலி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

Next Story