பனை மரத்தில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி பலி
காரைக்காலில் பனை மரத்தில் நுங்கு வெட்ட ஏறியவா் தவறி விழுந்து தொழிலாளி உயிாிழந்தாா்.
காரைக்கால் நித்தீஸ்வரம் பகுதியை சேர்ந்தவர் மோரீஸ் (வயது 46). மரம் ஏறும் தொழிலாளி. இவரது மனைவி ஆரோக்கியமேரி. இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். இந்தநிலையில் மோரீஸ் வழக்கம்போல் நேற்று முன்தினம் காலை காரைக்கால் டோபி காலனி அருகே நுங்கு வெட்ட பனை மரத்தில் ஏறினார்.
அப்போது எதிர்பாராத விதமாக பனை மரத்தில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் பலத்த காயம் அடைந்த அவரை, உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், மோரீஸ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து காரைக்கால் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story