கரூர் மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா முன்னிட்டு திரளான பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்து நேர்த்திக்கடன்


கரூர்
x
கரூர்
தினத்தந்தி 15 May 2022 10:43 PM IST (Updated: 15 May 2022 10:43 PM IST)
t-max-icont-min-icon

கரூர் மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா முன்னிட்டு திரளான பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். மேலும் நீண்ட நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

கரூர், 
வைகாசி திருவிழா
கரூரில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் வைகாசி திருவிழாவையொட்டி ஆண்டுதோறும் கோவில் முன்பு கம்பம் நடப்பட்டு புனிதநீர் ஊற்றி வழிபாடு செய்வதும், பிறகு அந்த கம்பத்தினை ஆற்றில் விடும் நிகழ்வும் சிறப்பு வாய்ந்தது ஆகும். அந்த வகையில் இந்த ஆண்டு வைகாசி திருவிழா கடந்த 8-ந்தேதி கம்பம் நடுதல் நிகழ்ச்சியுடன் திருவிழா தொடங்கியது. 
அதன்பிறகு தினமும் பக்தர்கள் புனிதநீர், பால் மூலம் கம்பத்திற்கு அபிஷேகம் செய்து வருகின்றனர். கடந்த 13-ந்தேதி பூச்சொரிதல் விழா மிகவும் கோலாகலமாக நடந்தது. நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து 47 பூத்தட்டுகள் கொண்டு வரப்பட்டு, அம்மனுக்கு சாத்தப்பட்டன.
சாமி தரிசனம்
இந்நிலையில்அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் குடும்பத்துடன் நீண்ட வரிசையில் காத்திருந்து கம்பத்திற்கு புனிதநீர் மற்றும் பால்குடம் மூலம் அபிஷேகம் செய்து, சாமி தரிசனம் செய்தனர். மேலும் பக்தர்கள் கோவிலை சுற்றி அங்கபிரதட்சணமும் செய்து தங்களது நேர்த்திக் கடனை செலுத்தினர். இதனைத்தொடர்ந்து மாலை காப்பு கட்டுதல் விழா நடைபெற்றது. 
வருகிற 23-ந்தேதி திருத்தேரோட்டம் நடக்கிறது. 22, 23, 24, 25-ந்தேதிகளில் மாவிளக்கும், பால்குடமும், 23, 24-ந்தேதிகளில் அக்னி சட்டி, அலகு குத்துதல், காவடி எடுத்தல் போன்ற நேர்த்தி கடன்கள் செலுத்தும் விழாவும் நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான கம்பம் ஆற்றுக்கு அனுப்பும் விழா வருகிற 25-ந்தேதி நடைபெறுகிறது.

Next Story