பொதுமக்களை அச்சுறுத்தி வந்த குரங்குகள் பிடிபட்டன


பொதுமக்களை அச்சுறுத்தி வந்த குரங்குகள் பிடிபட்டன
x
தினத்தந்தி 15 May 2022 10:48 PM IST (Updated: 15 May 2022 10:48 PM IST)
t-max-icont-min-icon

ஆர்ப்பாக்கம் கிராமத்தில் பொதுமக்களை அச்சுறுத்தி வந்த குரங்குகள் பிடிபட்டன

கொள்ளிடம்
கொள்ளிடம் அருகே ஆர்ப்பாக்கம் கிராமம், மந்தக்கரை பகுதியில் உள்ள மரங்களில் 2 குரங்குகள் வசித்து வந்தன. இந்த குரங்குகள் அந்த பகுதியில் மேய்ச்சலுக்கு வரும் ஆடு-மாடுகளை கடித்தும் மேலும் அந்த வழியாக செல்லும் பொதுமக்களையும் அச்சுறுத்தி வந்தன. சமீபத்தில் ஒரு பள்ளி மாணவன் மற்றும் விவசாயி ஒருவரை இந்த குரங்குகள் கடித்தன. ஆகவே, இந்த குரங்குகளை பிடித்து அப்புறப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
அந்த கோரிக்கையின்பேரில், சீர்காழி வனத்துறை அலுவலர் டேனியல் தலைமையில் வன அலுவலர்கள் ஆர்ப்பாக்கம் கிராமத்திற்கு சென்று கூண்டு வைத்து அந்த குரங்குகளை பிடித்து அரியலூர் மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் கொண்டு சென்று விட்டனர். இதுகுறித்து நடவடிக்கை எடுத்த வனத்துறையினருக்கு அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.


Next Story