கரூரில் 1 கிலோ தக்காளி ரூ.80-க்கு விற்பனை


கரூர்
x
கரூர்
தினத்தந்தி 15 May 2022 10:48 PM IST (Updated: 15 May 2022 10:48 PM IST)
t-max-icont-min-icon

வரத்து குறைவால் கரூரில் 1 கிலோ தக்காளி ரூ.80-க்கு விற்பனையானது. இதனால் இல்லத் தரசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

கரூர், 
வரத்து குறைவு
கரூர் பஸ்நிலையம் அருகே தினசரி மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இந்த தினசரி மார்க்கெட்டிற்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து காய்கறிகள் விற்பனைக்கு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் கோடைமழை பரவலாக பெய்து வருகிறது. இதன்காரணமாக காய்கறிகள் விளைச்சல் பாதிக்கப்பட்டு வரத்து குறைந்து வருகிறது. 
அந்தவகையில் மழையின் காரணமாக தக்காளி விளைச்சல் குறைந்து உள்ளது. இதனால் வரத்தும் குறைந்துவிட்டது. இந்நிலையில் கரூர் தினசரி மார்க்கெட்டில் நேற்று 1 கிலோ தக்காளி ரூ.80-க்கு விற்பனையானது. கடந்த வாரம் 1 கிலோ தக்காளி விலை ரூ.50-க்கு விற்பனையானது. வரத்து குறைவின் காரணமாக தக்காளி விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே செல்கிறது. கடந்த மாதம் ரூ.25-க்கு 1 கிலோ தக்காளி விற்பனையானது குறிப்பிடத்தக்கது. விலையேற்றத்தால் இல்லத்தரசிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
விலை உயர்வு
இதேபோல் கடந்த வாரத்தை விட நேற்று மற்ற காய்கறிகளின் விலையும் உயர்ந்து உள்ளது. அதன்படி (1 கிலோ) கேரட் ரூ.80-க்கும், பீன்ஸ் ரூ.120-க்கும், அவரைக்காய் ரூ.120-க்கும், வெண்டைக்காய் ரூ.60-க்கும், முள்ளங்கி ரூ.50-க்கும், பீட்ரூட் ரூ.60-க்கும், ஊட்டி உருளை ரூ.50-க்கும் விற்பனையானது. 
மேலும் காளிபிளவர் 1 பூ ரூ.40 முதல் 50-க்கு விற்பனையானது. இதுகுறித்து வியாபாரிகளிடம் கேட்டபோது, மழை காரணமாக தக்காளி விளைச்சல் குறைந்து, வரத்து குறைந்துள்ளது. இதன்காரணமாக தக்காளி உள்ளிட்ட காய்கறிகளின் விலை உயர்ந்துள்ளது. கடந்த வாரத்தை விட ரூ.10 முதல் 20 வரை காய்கறிகள் விலை உயர்ந்து உள்ளது. காய்கறிகளின் வரத்து அதிகமானால்தான் விலை குறையும், என்றனர்.

Next Story