நடுப்பட்டி மாரியம்மன் கோவில் பகுதியில் தூய்மை பணிகள்


கரூர்
x
கரூர்
தினத்தந்தி 15 May 2022 10:54 PM IST (Updated: 15 May 2022 10:54 PM IST)
t-max-icont-min-icon

நடுப்பட்டி மாரியம்மன் கோவில் பகுதியில் தூய்மை பணிகள் நடந்தது.

குளித்தலை, 
தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் பேரூராட்சி பகுதிகளில் ஒவ்வொரு மாதமும் 2-வது மற்றும் 4-வது சனிக்கிழமைகளில் பூங்கா, வழிபாட்டுத்தலங்கள், ரெயில் நிலையம் போன்ற பொது இடங்களில் தூய்மை தொடர்பான பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மருதூர் பேரூராட்சிக்குட்பட்ட நடுப்பட்டி மாரியம்மன் கோவில் பகுதியில் தூய்மை பணிகள் நேற்று மேற்கொள்ளப்பட்டன. பொதுமக்களுக்கு தூய்மை தொடர்பான விழிப்புணர்வு நடத்தப்பட்டது. இதில் மருதூர் பேரூராட்சி தலைவர் சகுந்தலா, துணைத்தலைவர் நாகராஜன், பேரூராட்சி செயல் அலுவலர் விஜயன் மற்றும் பேரூராட்சி அலுவலர்கள் வார்டு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Next Story