பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என நுகர்பொருள் வாணிப கழக பாரதீய தொழிலாளர் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
திருவாரூர்:
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என நுகர்பொருள் வாணிப கழக பாரதீய தொழிலாளர் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
செயற்குழு கூட்டம்
திருவாரூரில் நுகர்பொருள் வாணிப கழக பாரதீய தொழிலாளர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு மாநில தலைவர் சிதம்பரசாமி தலைமை தாங்கினார். மாநில செயல் தலைவர் கணேசன், மாநில அமைப்பு செயலாளர் துரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். பாரதீய மஸ்தூர் சங்கத்தின் தென்பாரத அமைப்பு செயலாளர் துரைராஜ், மண்டல தலைவர் கிருஷ்ணமூர்த்தி, மண்டல செயலாளர் புத்தர், மாநில பொருளாளர் பாலகுமாரன், பி.எம்.எஸ். தொழிற்சங்க பொதுச்செயலாளர் விமேஸ்வரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
நுகர்பொருள் வாணிப கழகம் மூலம் செயல்படும் ரேஷன் கடைகளை கூட்டுறவுத்துறைக்கு மாற்றும் முடிவினை கைவிட வேண்டும்.
பழைய ஓய்வூதிய திட்டம்
எருக்கூர், சித்தர்காடு, சிதம்பரம் அரிசி ஆலைகளை தனியாரிடம் ஒப்படைக்க கூடாது. கொரோனா காலத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட ஈட்டிய விடுப்பு ஒப்பளிப்பு, பஞ்சப்படி உயர்வுகளை வழங்க வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். காலியாக உள்ள 1,000 பணியிடங்களை தகுதி, பணி மூப்பின் அடிப்படையில் நெல் கொள்முதல் பணியாளர்களை கொண்டு நிரப்பிட வேண்டும்.
10 ஆண்டுகளாக கிடங்குகளில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்களை நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக மாநில பொதுச்செயலாளர் நாகராஜன் வரவேற்றார். முடிவில் மாநில செயற்குழு உறுப்பினர் சுரேஷ்பாபு நன
Related Tags :
Next Story