மரக்கடை சாலையில் தேங்கி கிடக்கும் மழைநீரால் வாகன ஓட்டிகள் அவதி
கூத்தாநல்லூர் அருகே லெட்சுமாங்குடி மரக்கடை சாலையில் தேங்கி கிடக்கும் மழைநீரால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர். இதை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
கூத்தாநல்லூர்:
கூத்தாநல்லூர் அருகே லெட்சுமாங்குடி மரக்கடை சாலையில் தேங்கி கிடக்கும் மழைநீரால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர். இதை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
சாலையில் தேங்கி கிடக்கும் மழைநீர்
கூத்தாநல்லூர் அருகே, லெட்சுமாங்குடியில் உள்ள மரக்கடை கடைவீதி சாலை எப்போதும் மக்கள் கூடும் இடமாக இருந்து வருகிறது.இங்கு மரக்கடை பஸ் நிறுத்தம் மற்றும் வழிபாட்டு தலங்கள் உள்ளதாலும், கடைவீதி சாலை என்பதாலும், திருவாரூர், மன்னார்குடிக்கு இந்த சாலை வழியாக வாகனங்கள் செல்வதாலும் போக்குவரத்து அதிக அளவில் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் மரக்கடை சாலையில் அடிக்கடி மழைநீர் தேங்கி நிற்கும் நிலை இருந்து வருகிறது. சாலையின் இரண்டு பக்கமும் மழைநீர் தேங்கி கிடப்பதால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.
தொற்று நோய்
மேலும், பஸ் நிறுத்தத்தில் நிற்கும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பயணிகள், கடைவீதிக்கு செல்வோர் என அனைவரும் அதிகம் சிரமம் அடைந்து வருகின்றனர். சாலையில் மழைநீர் தேங்கி கிடப்பதால் அதில் கொசுக்கள் உற்பத்தியாகி அந்த பகுதி மக்களுக்கு தொற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளது.
கடந்த சில நாட்களாக கூத்தாநல்லூர் பகுதிகளில் பெய்து வரும் மழையால் தற்போது இந்த சாலையில் தண்ணீர் தேங்கி சேறும், சகதியுமாக காணப்படுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கூத்தாநல்லூர் மரக்கடை சாலையில் மழைநீர் தேங்காதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பகுதி பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்..
---
Related Tags :
Next Story