விவசாயிகளுக்கு பயிற்சி


விவசாயிகளுக்கு பயிற்சி
x
தினத்தந்தி 15 May 2022 11:04 PM IST (Updated: 15 May 2022 11:04 PM IST)
t-max-icont-min-icon

விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

ராமநாதபுரம், 
வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் திருப் புல்லாணி வட்டார ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையத்தில் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின்கீழ் முதல்-அமைச்சரின் மானாவாரி மேம்பாட்டு இயக்கத்தின் கீழ் விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. பரமக்குடி உழவர் பயிற்சி நிலைய துணை இயக்குனர் கண்ணையா முன்னிலை வகித்தார். திருப் புல்லாணி வேளாண்மை உதவி இயக்குனர் அமர்லால் பயிற்சியை தொடங்கி வைத்தார். தேசிய உணவு பாதுகாப்பு இயக்க மாவட்ட ஆலோசகர் ஸ்ரீதர், தரக்கட்டுப்பாடு உதவி இயக்குனர் நாகராஜன், விற்பனை வணிகத்துறை அலுவலர் உலகுசுந்தரம் ஆகியோர் பயிற்சியில் கலந்துகொண்டு மானா வரி சாகுபடி தொழில் நுட்பங்களை விளக்கி கூறினர்.  தொழில் நுட்பங்கள் பற்றி விவசாயிகளுக்கு தெரிவிக்கப் பட்டது. கூட்ட முடிவில் வட்டார தொழில் நுட்ப மேலாளர் பானுமதி நன்றி கூறினார்.

Next Story