அனைத்து பஸ்களும் நின்று செல்ல வேண்டும்
சிவப்பிரியா நகர் பஸ் நிறுத்தத்தில் அனைத்து பஸ்களும் நின்று செல்ல வேண்டும் குடியிருப்போர் நலச்சங்க கூட்டமைப்பு வலியுறுத்தல்
மயிலாடுதுறை:
மயிலாடுதுறை வள்ளாலகரம் ஊராட்சியில் 30-க்கும் அதிகமான குடியிருப்போர் நலச்சங்கத்தை சேர்ந்தவர்கள் ஒன்றிணைந்து குடியிருப்போர் நலச்சங்க கூட்டமைப்பை தொடங்கி ஆலோசனை கூட்டம் நடத்தினர். இந்த கூட்டத்திற்கு வெங்கடேஸ்வரா நகர் தலைவர் அன்பழகன் தலைமை தாங்கினார். அபிராமி நகர் தலைவர் ராமலிங்கம், ஜோதி நகர் தலைவர் சாமி கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சீர்காழி சாலை சிவப்பிரியா நகர் பஸ்நிறுத்தத்தில் அனைத்து பஸ்களும் நின்று செல்ல மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். வள்ளாலகரம் ஊராட்சியில் அதிக அளவில் ரேஷன் கார்டுகள் இருப்பதால் தற்போது இருக்கும் ரேஷன் கடையை இரண்டாக பிரிக்க வேண்டும். மழைக்காலங்களில் குடியிருப்புகளை சுற்றி மழைநீர் தேங்கி நிற்பதால் மழைநீர் வடிகால், பாசனவாய்க்கால்களை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
Related Tags :
Next Story