தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
ஆபத்தான நிழற்குடை
திருச்சி மாவட்டம், மருங்காபுரி வட்டம், துவரங்குறிச்சி கிராமத்தில் தேசிய நெடுஞ்சாலையில் மோரனிமலை அருகில் அமைந்துள்ள பஸ் நிறுத்த நிழற்குடை அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் அதன் தூண்கள் சிதிலமடைந்து எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதில் பயணிகள் சிலர் ஆபத்தை உணராமல் அமர்ந்து வருகின்றனர். பொதுமக்கள் இந்த பயணிகள் நிழற்குடைக்குள் அமரும்போது இந்த நிழற்குடை இடிந்து விழுந்தால் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
சரவணன், துவரங்குறிச்சி, திருச்சி.
தேங்கி நிற்கும் கழிவுநீர்
திருச்சி மாவட்டம், துறையூர் வட்டம், உப்பிலியபுரம் ஊராட்சி ஒன்றியம், பச்சை பெருமாள்பட்டி ஊராட்சி 11-வது வார்டு அண்ணா நகர் பகுதியில் முறையான கழிவுநீர் வாய்க்கால் வசதி அமைக்கப்படாததால் இப்பகுதியில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் செல்ல வழியின்றி ஆங்காங்கே தேங்கி நிற்கிறது. இதனால் இவற்றில் இருந்து அதிக அளவில் கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு, மலேரியா உள்ளிட்ட காய்ச்சல் பரவ அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பாலச்சந்திரன், பச்சை பெருமாள்பட்டி, திருச்சி.
மின் விளக்குகள் அமைக்கப்படுமா?
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் ஊராட்சி மற்றும் லால்குடி ஊராட்சி எல்லைக்குட்பட்ட பிச்சாண்டார் கோவில் ரெயில் நிலையம் பகுதியில் உள்ள சாலையில் மின் விளக்குகள் அமைக்கப்படாததால் இரவு நேரத்தில் இப்பகுதியில் நடந்து செல்ல பொதுமக்கள் பெரிதும் அச்சப்பட்டு வருகின்றனர். மேலும் இரவு நேரத்தில் இப்பகுதி இருள் சூழ்ந்து காணப்படுவதினால் இப்பகுதியில் சட்ட விரோத செயல்கள் நடக்க அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பாலு, பிச்சாண்டார் கோவில், திருச்சி.
தேங்கி நிற்கும் கழிவுநீர்
திருச்சி மாநகராட்சி 17-வது வார்டு நடுகள்ளத்தெருவில் 10-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கழிவுநீர் வாய்க்கால்கள் தூர்ந்துபோன நிலையில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால் கழிவுநீர் செல்ல வழியின்றி தேங்கி நிற்கிறது. மேலும் பொதுமக்கள் நடந்து செல்லும் இடங்களில் கழிவுநீர் செல்வதால் இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. மேலும் தேங்கி நிற்கும் கழிவுநீரில் இருந்து அதிக அளவில் கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு, மலேரியா உள்ளிட்ட காய்ச்சல் பரவ அதிக வாய்ப்புள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
ராஜேந்திரன், நடுகள்ளத்தெரு, திருச்சி.
குடிநீர் இன்றி மக்கள் அவதி
திருச்சி மாவட்டம், மணப்பாறை நகராட்சிக்கு உட்பட்ட பகுதியான 5-வது வார்டு அத்திக்குளம், பூசாரிக்குளம், சந்தைப்பேட்டை, தர்மலிங்கம் தெரு, திருச்சி-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை, சிதம்பரத்தான்பட்டி ஆகிய பகுதிகளில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு மாதத்திற்கு 2 அல்லது 3 முறை மட்டுமே குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதனால் இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
ஹேமலதா, மணப்பாறை, திருச்சி.
போக்குவரத்திற்கு இடையூறான மின்கம்பம்
திருச்சி மாவட்டம், ச.கண்ணனூர் பேரூராட்சி 6-வது வார்டு பகுதியில் சாலையின் நடுவே மின்கம்பம் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் இரவு நேரத்தில் மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் சாலையின் நடுவே மின்கம்பம் இருப்பது தெரியாமல் அதில் வாகனத்தை விட்டு நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். மேலும் நான்கு சக்கர வாகனங்கள் செல்ல பெரிதும் இடையூறாக உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட மின்சாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், ச.கண்ணனூர், திருச்சி.
Related Tags :
Next Story